சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நன்செய் நிலங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் அறிந்துகொள்ள ஏதுவாக “இந்தியாவின் நன்செய் நிலங்கள்” என்ற இணையதளத்தை திரு பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 02 OCT 2021 2:40PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை சார்பில், சுதந்திர தின அமிர்த விழாவின் ஒரு பகுதியாக காந்திஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இந்தியாவின் நன்செய் நிலங்கள் இணையதளம் என்ற புதிய இணையதளத்தை, இத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்.

நன்செய் நிலங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் அறிந்துகொள்ள இந்த இணையதளத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் தங்களது நிலம் பற்றிய தகவல்களை இடம்பெற செய்ய விரும்புவோர் அதனை பதிவேற்றம் செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவுசெய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தங்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பங்கேற்க விரும்புபவர்களை தொடர்புகொள்ள முடியும்.

***


(रिलीज़ आईडी: 1760375) आगंतुक पटल : 364
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali , Punjabi