நித்தி ஆயோக்
இந்தியாவை மாற்றும் பெண்களுக்கான விருதுகள் : விண்ணப்பங்களை வரவேற்கிறது நிதி ஆயோக்கின் பெண்கள் தொழில் முனைவு தளம்
Posted On:
02 OCT 2021 1:25PM by PIB Chennai
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாட, 75 பெண் சாதனையாளர்களுக்கு நிதி ஆயோக்கின் பெண்கள் தொழில் முனைவு தளம் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கவுள்ளது. இந்த தளம் ஏற்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. தனித்துவமான வர்த்தக தீர்வுகள் மூலம் சவால்களை சமாளித்து தற்சார்பு தொழில்களை உருவாக்கி சாதனை படைத்த பெண் தொழில்முனைவோர்களின் பங்களிப்புகளை, இந்தியாவை மாற்றும் பெண்களுக்கான விருதுகள் (டபிள்யூடிஐ) கொண்டாடுகிறது.
நாடு முழுவதும், மாற்றத்தை ஏற்படுத்தும், விதிவிலக்கான பெண்களின் கதைகளை கொண்டாடவும், அங்கீகரிக்கவும், நிதி ஆயோக் மேற்கொண்ட முயற்சிதான் டபிள்யூடிஐ விருதுகள்.
இந்த ஆண்டு, டபிள்யூடிஐ விருதுகள் ஐ.நா, சிஸ்கோ சிஎஸ்ஆர், எப்ஐசிசிஐ மற்றும் கிரான்ட் த்ரான்டன் பாரத் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பம் https://wep.gov.in/, தளத்தில் உள்ளது. விண்ணப்பங்கள் 2021 டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் https://wep.gov.in/wep-faqs என்ற தளத்தில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760280
*****
(Release ID: 1760349)
Visitor Counter : 350