எரிசக்தி அமைச்சகம்
தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டை ஆய்வு செய்த மத்திய மின் துறை அமைச்சர், சூரிய சக்தி/காற்றாலை திட்டங்களில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்
Posted On:
02 OCT 2021 12:58PM by PIB Chennai
தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் ஆய்வு கூட்டங்களை மத்திய மின் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் நேற்று நடத்தினார்.
சூரிய சக்தி/காற்றாலை திட்டங்களில் கவனம் செலுத்துமாறு இரு நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டன. அவற்றின் மூலதன செலவினங்களை அதிகரிக்குமாறும், மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள் 90 சதவீத மூலதன செலவின நிதியை செலவிடுமாறும் இரண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்களையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
குர்ஜா சூப்பர் அனல் மின் திட்டத்திற்காக கரியமல தொழில்நுட்பத்தை நிறுவ எடுத்த நடவடிக்கைகளுக்காக தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டை திரு சிங் பாராட்டினார். தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜன் துறையில் நுழைந்ததற்காக நிறுவனத்தை பாராட்டிய அமைச்சர், உத்தரப் பிரதேசத்தின் சித்திரகூட் மாவட்டத்தில் அதன் 800 மெகவாட் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு திட்டத்தை சுட்டிக்காட்டினார்.
அனல் மின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் சுரங்கங்களின் மேம்பாடு ஆகியவற்றுக்காக இரு புதிய பிரிவுகளை உருவாக்குமாறு தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760272
*******
(Release ID: 1760347)
Visitor Counter : 202