வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துப்புரவு தொழிலாளர்களை கவுரவித்த திரு ஹர்தீப் சிங் பூரி


அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் தத்தமது பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களை கவுரவித்தன

Posted On: 02 OCT 2021 2:27PM by PIB Chennai

புதுதில்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் & பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கவுரவித்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர், வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பூரி, தூய்மைப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்த மகாத்மா காந்தி, 1916லேயே நாட்டு மக்கள் அனைவரும் தனி நபர் தூய்மையை பராமரிப்பதுடன் தங்களது சுற்றுப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என அழைப்பு விடுதத்தை சுட்டிக்காட்டினார். தேச பிதாவின் இந்த தொலைநோக்கு சிந்தனைக்கு உறுதியான செயல்வடிவம் கொடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கியதையும் நினைவு கூர்ந்தார்.

இந்த இயக்கம் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியது மட்டுமின்றி, மக்களிடையே பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் முன்கலப்பணியாளர்கள் கோவிட் பெருந்தொற்று காலத்தில் நமது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க அயராது பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் 2019ம் ஆண்டிலேயே நாட்டில் பெரும்பகுதி திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதியாக மாறியுள்ளது என்றும் திரு பூரி தெரிவித்தார். அடுத்த இரு நாட்களில் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களை கவுரவிக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

***************************



(Release ID: 1760340) Visitor Counter : 156