பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிஐஎஸ்சி தலைவராக ஏர் மார்ஷல் பி.ஆர் கிருஷ்ணா பதவி ஏற்பு

Posted On: 01 OCT 2021 11:54AM by PIB Chennai

பாதுகாப்பு படை தலைவர்கள் குழுவின்(CISC) , ஒருங்கிணைந்த தலைவராக ஏர் மார்ஷல் பி.ஆர்.கிருஷ்ணா இன்று பொறுப்பேற்றார். அவருக்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதையடுத்து புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் சிஐஎஸ்சி தலைவர் மரியாதை செலுத்தினார்

விமானப்படையில் விமானியாக சேர்ந்த இவர், தனுது 38 ஆண்டு பணிக்காலத்தில், பல பதவிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், 5,000 மணி நேரத்துக்கும் மேல் விமானத்தை இயக்கியுள்ளார். அவருக்கு கடந்த 1986ம் ஆண்டு சௌர்ய சக்ரா விருதும், கடந்த 1987ம் ஆண்டில் அதி விசிஷ்ட் சேவா பதக்கமும்  வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759884

******


(Release ID: 1760006) Visitor Counter : 251