ஜல்சக்தி அமைச்சகம்
பிரதமர் அக்டோபர் 2 ஆம் தேதி ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பானி சமிதிகளுடன் (தண்ணீர் வழங்கும் குழுக்கள்) உரையாட உள்ளார்பிரதமர் ஜல் ஜீவன் இயக்க செயலி அறிமுகம் செய்ய உள்ளார்
Posted On:
01 OCT 2021 2:44PM by PIB Chennai
ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்க 15 ஆகஸ்ட், 2019 அன்று, ஜல் ஜீவன் இயக்கத்தை அறிமுகம் செய்தார் அந்த இயக்கம் தொடங்கிய நேரத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், 5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் வழி தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை, சுமார் 8.26 கோடி (43%) கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெற்றுள்ளன. 78 மாவட்டங்கள், 58 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1.16 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளும் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெறுகின்றன. இதுவரை, 7.72 லட்சம் (76%) பள்ளிகள் மற்றும் 7.48 லட்சம் (67.5%) அங்கன்வாடி மையங்களில் குழாய் வழி தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
'அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி,அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி 'மற்றும்' அடிமட்டத்திலிருந்து தொடங்குவது போன்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, ஜல் ஜீவன் இயக்கம் மாநிலங்களுடன் இணைந்து 3.60 லட்சம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. மேலும், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் கிராமங்களில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்காக 15 வது நிதி ஆணையத்தின் கீழ் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கு 1.42 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1759928)
(Release ID: 1759952)