பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் அக்டோபர் 2 ஆம் தேதி ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பானி சமிதிகளுடன் (தண்ணீர் வழங்கும் குழுக்கள்) உரையாட உள்ளார்

பிரதமர் ஜல் ஜீவன் இயக்க செயலி மற்றும் தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திற்கான நிதி திரட்டலை அறிமுகம் செய்ய உள்ளார்

Posted On: 01 OCT 2021 12:16PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் வழங்கும் குழுக்களுடன் (பானி சமிதி) / கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுக்களுடன் (VWSC) 2021 அக்டோபர் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார்.

பயனாளர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவும், இத்திட்டத்தின்கீழ் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுக்கான ஜல் ஜீவன் இயக்க செயலியை பிரதமர், அறிமுகப்படுத்துகிறார்.

இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும்  எந்தவொரு தனிநபர், நிறுவனம், பெருநிறுவனம் அல்லது வசதிபடைத்தவர்கள், ஒவ்வொரு கிராமப்புற வீடு, பள்ளி, அங்கன்வாடி மையம், ஆசிரமங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கு குழாய் வழி தண்ணீர் இணைப்பை வழங்குவதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய தேசிய ஜல் ஜீவன் நிதி திரட்டலையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.

நாடு தழுவிய கிராமசபைகளும் ஜல் ஜீவன் இயக்கத்தில் பங்கு பெறும். கிராமசபைகள் கிராம தண்ணீர் வழங்கல் அமைப்புகளின் திட்டமிடல் மற்றும் மேலாண்மை பற்றி விவாதிப்பதோடு நீண்ட கால தண்ணீர் பாதுகாப்பிற்கும் வேலை செய்யும்.

தண்ணீர் வழங்கும் குழுக்கள்  கிராமப்புற தண்ணீர் மற்றும் துப்புரவு குழுக்கள் பற்றி

கிராம தண்ணீர் வழங்கு அமைப்புகளின் திட்டமிடல், செயல்படுத்தல், மேலாண்மை, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் தண்ணீர் வழங்கும் குழுக்கள் (பானி சமிதி) முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் சீராக நீண்டகால அடிப்படையில் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்குகிறது.

6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 3.5 லட்சம் கிராமங்களில் தண்ணீர் வழங்கும் குழுக்கள் (பானி சமிதி)/ கிராமப்புற தண்ணீர் மற்றும் துப்புரவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கள பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி நீரின் தரத்தை பரிசோதிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம் பற்றி பிரதமர் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்க 15 ஆகஸ்ட், 2019 அன்று, ஜல் ஜீவன் இயக்கத்தை அறிமுகம் செய்தார் அந்த இயக்கம் தொடங்கிய நேரத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், 5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் வழி தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை, சுமார் 8.26 கோடி (43%) கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெற்றுள்ளன. 78 மாவட்டங்கள், 58 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1.16 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளும் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெறுகின்றன. இதுவரை, 7.72 லட்சம் (76%) பள்ளிகள் மற்றும் 7.48 லட்சம் (67.5%) அங்கன்வாடி மையங்களில் குழாய் வழி தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

'அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி,அனைவரின் நம்பிக்கைஅனைவரின் முயற்சி 'மற்றும்' அடிமட்டத்திலிருந்து தொடங்குவது போன்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, ஜல் ஜீவன் இயக்கம் மாநிலங்களுடன் இணைந்து 3.60 லட்சம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. மேலும், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் கிராமங்களில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்காக 15 வது நிதி ஆணையத்தின் கீழ் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கு 1.42 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

*****

 


(Release ID: 1759920) Visitor Counter : 293