நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறனில் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது

Posted On: 30 SEP 2021 4:46PM by PIB Chennai

மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறனில் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் இந்தியாவின் மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது.

இந்த அறிக்கை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்தியாவுக்கான உலக சுகாதார இயக்கத்தின் ஒத்துழைப்பின் விளைவாகும். இந்திய தர குழுவின் அங்கமான மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம், கள அளவிலான தரவு சரிபார்ப்பை நடத்தியது.

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக கூடுதல் செயலாளர் திருமதி ஆர்த்தி அஹுஜா, இந்தியாவுக்கான உலக சுகாதார இயக்க பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ ஆப்ரின், இந்திய தர குழு தலைவர் திரு அடில் ஜைனுல்பாய் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதில் மாவட்ட மருத்துவமனைகளின் முக்கியப் பங்கை அறிக்கையின் முன்னுரையில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் வலியுறுத்தினார். மேம்பட்ட இரண்டாம் நிலை பராமரிப்பை வழங்குவதில் அவற்றுக்கு முக்கிய பங்கு இருந்தபோதிலும், மனித வளம், திறன்கள், பயன்பாடு  மற்றும் சேவை மேம்பாடு உள்ளிட்டவற்றில் பற்றாக்குறை உள்ளிட்ட சில இடைவெளிகள் துரதிர்ஷ்டவசமாக உள்ளன. 

தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பேசுகையில், “இந்த அறிக்கை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறன் மதிப்பீடு ஆகும். தரவு-சார்ந்த நிர்வாகத்தை நோக்கி சுகாதார விநியோக முறையின் பெரிய மாற்றத்தை இது குறிக்கிறது. மேலும், சமூகங்கள் மற்றும் சுகாதார சேவைகளைப் பெறும் மக்களுடன் நம்மை இன்னும் நெருக்கமாக அழைத்துச் செல்கிறது,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759654

*****************


(Release ID: 1759785) Visitor Counter : 277