நிதி அமைச்சகம்

இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் 13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை

Posted On: 30 SEP 2021 4:23PM by PIB Chennai

பன்னிரண்டு பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு மற்றும் இனிமேல் விளம்பரப்படுத்தப்படும் காலியிடங்களுக்கான தொடக்க மற்றும் முக்கிய தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசின் நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியாளர்களுக்கான தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்துவது குறித்து ஆராய இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை ஐபிபிஎஸ்-ஆல் தொடங்கப்பட்ட தேர்வு செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

உள்ளூர் இளைஞர்களுக்கு ஒரே மாதிரியான வாய்ப்பை வழங்குவதோடு உள்ளூர்/பிராந்திய மொழிகள் மூலம் வாடிக்கையாளர்களுடன்  உரையாடுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த குழு செயல்பட்டது.

பிராந்திய மொழிகளில் எழுத்தர் தேர்வுகளை நடத்தும் இந்த முடிவு எதிர்கால பாரத ஸ்டேட் வங்கி காலியிடங்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்ட மற்றும் ஆரம்பத் தேர்வுகள் நடைபெற்ற காலியிடங்களுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய ஆட்சேர்ப்பு செயல்முறை விளம்பரத்தின் படி நடத்தி முடிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759643

*****************(Release ID: 1759747) Visitor Counter : 368