இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய அளவிலான ஒரு மாத கால தூய்மை இந்தியா திட்டம்: உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ்-ல் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
29 SEP 2021 4:22PM by PIB Chennai
தேசிய அளவிலான ஒரு மாத கால தூய்மை இந்தியா திட்டத்தை, உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் தொடங்கி வைக்கிறார் சுதந்திர இந்தியாவின் வைர விழாவை கொண்டாடும், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், நாடுதழுவிய தூய்மை இந்தியா திட்டத்தை 2021 அக்டோபர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்துகிறது. இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் 744 மாவட்டங்களில் 6 லட்சம் கிராமங்களில், நேரு யுவ கேந்திர சங்கதன் அமைப்புடன் இணைக்கப்பட்ட இளைஞர் மன்றங்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மூலம் நடத்தப்படுகின்றன.
இது குறித்து இளைஞர் விவகாரத்துறை செயலாளர் திருமதி உஷா சர்மா புது தில்லியில் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தூய்மை நடவடிக்கை உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ்-ல், மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூரால் தொடங்கி வைக்கப்படும். தூய்மை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நாடு முழுவதும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் மக்களை ஈடுபடுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். இந்த மிகப் பெரிய நடவடிக்கை மூலம், 75 லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மக்களின் தன்னார்வ பங்களிப்புடன் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்பாக, மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் வெளியிட்ட அறிவிப்பில், சுதந்திர இந்தியாவின் வைர விழாவை நாம் கொண்டாடும் தருணத்தில், பிளாஸ்டிக் கழிவை நாட்டில் இருந்து ஒழிக்க நாம் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்றார்.
இந்த தூய்மை நடவடிக்கை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759273
-----
(Release ID: 1759397)
Visitor Counter : 265