பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
தேசிய ஏற்றுமதி காப்பீடு கணக்கு திட்டத்தை தொடரவும் மற்றும் மூலதனத்தை புகுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,650 கோடி மானிய உதவி அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
29 SEP 2021 3:59PM by PIB Chennai
ஏற்றுமதி துறைக்கு ஊக்குவிப்பை வழங்க தொடர் நடவடிக்கைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தேசிய ஏற்றுமதி காப்பீடு கணக்கு திட்டத்துக்கு (NEIA ) மூலதன தொகையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,650 கோடி மானிய உதவி அளிக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி திட்டங்களை ஊக்குவிக்க தேசிய ஏற்றுமதி காப்பீடு கணக்கு அறக்கட்டளை கடந்த 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது நடுத்தர மற்றும் நீண்ட கால ஏற்றுமதி திட்டங்களை இசிஜிசி நிறுவனம் மூலம் ஊக்குவிக்கிறது.
என்இஐஏ அறக்கட்டளைக்கு மூலதன தொகை வழங்குவது, இந்திய ஏற்றுமதி திட்டங்களுக்கு உதவும். என்இஐஏ அறக்கட்டளைக்கு ரூ.1,650 கோடி மூலதன தொகை வழங்குவதன் மூலம், ரூ.33,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி திட்டங்களுக்கு என்இஐஏ அறக்கட்டளை உதவும். மேலும், இது 2.6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759266
-----
(रिलीज़ आईडी: 1759366)
आगंतुक पटल : 372
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam