குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புதிய இணைய முறை/ உதயம் பதிவு: இதுவரை 50 இலட்சம் நிறுவனங்கள் பதிவு

Posted On: 28 SEP 2021 4:15PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தால் கடந்த 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புதிய இணைய முறை/ உதயம் பதிவில் இதுவரை 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில் 46 இலட்சம் குறு நிறுவனங்களும், 2.7 இலட்சம் சிறு நிறுவனங்களும் அடங்கும்.

https://udyamregistration.gov.in என்ற தளம், நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி இணைப்புகளுடன் அரசு மின்னணு சந்தை தளத்துடனும் சீராக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பின் வாயிலாக நிறுவனங்களின் பதிவு முற்றிலும் காகிதங்களற்றதாக மாறியுள்ளது.

இதில் இன்னும் பதிவு செய்யாத நிறுவனங்கள், அமைச்சகம் மற்றும் இதர அரசு முகமைகளின் பயன்களைப் பெறுவதற்கு, பதிவு செய்வது அவசியம். இந்தத் தளத்தில் பதிவு செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அரசு தளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். சந்தேகங்கள் இருப்பின், https://champions.gov.in என்ற இணையதளத்தை நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758950



(Release ID: 1759032) Visitor Counter : 285