பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வணிக கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் : இந்தியா - ஓமன் கடற்படை இடையே கையெழுத்து

प्रविष्टि तिथि: 27 SEP 2021 5:16PM by PIB Chennai

வணிக கப்பல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஓமன் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் சைப் பின் நசர் மொஹ்சன் அல்-ராபி, இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

இந்திய கடற்பை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் அரசு முறைப் பயணமாக ஓமன் சென்றுள்ளார். இந்நிலையில், இரு நாட்டு கடற்படைகள் இடையே, வணிக கப்பல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம், மஸ்கட்டில் உள்ள கடல்சார் பாதுகாப்பு மையத்தில் இன்று கையெழுத்தானது.

இதன் மூலம் இரு நாட்டு வணிக கப்பல்கள் போக்குவரத்தில் கடல்சார் பாதுகாப்பு அதிகரிக்கும்.

*****************


(रिलीज़ आईडी: 1758635) आगंतुक पटल : 296
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi