உள்துறை அமைச்சகம்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் 17-வது நிறுவன தினம்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
27 SEP 2021 3:07PM by PIB Chennai
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் 17-வது நிறுவன தினத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் நாளை தொடங்கி வைப்பார். இமாலயப் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் நிகழ்வுகளின் தொடர் விளைவுகள் என்பது இந்த வருட நிறுவன தினத்தின் கருப்பொருளாகும். பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா நிறைவுரை வழங்குவார். மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய், திரு அஜய் குமார் மிஸ்ரா மற்றும் திரு நிசித் பிரமாணிக் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்வார்கள்.
நிலச்சரிவு, அதீத கனமழை, நிலநடுக்கம் மற்றும் பனிப்பாறை வெடிப்பு போன்று இமாலயப் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் நிகழ்வுகளின் தாக்கம் குறித்து பிரபல நிபுணர்கள் கலந்துகொள்ளும் விவாத நிகழ்ச்சி, தொழில்நுட்ப அமர்வில் இடம்பெறும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மைக் கழகம், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சகங்கள்/ துறைகளின் பிரதிநிதிகள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையகங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758547
*****************
(रिलीज़ आईडी: 1758630)
आगंतुक पटल : 318