கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

விடுதலையின், அம்ருத் மஹோத்ஸவம்: கடகுஜங்காவில் பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் மெகா மருத்துவ முகாம்

Posted On: 27 SEP 2021 12:07PM by PIB Chennai

இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டைக் குறிக்கும் விடுதலையின், அம்ருத் மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, கடகுஜங்கா இளைஞர் அமைப்புடன் இணைந்து பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகம், கடகுஜங்காவில் மெகா மருத்துவ முகாமை நடத்தியது.

பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரஹலாத் பாண்டா மற்றும் இதர மருத்துவர்கள், சுமார் 1,000 நோயாளிகளுக்கு ஈசிஜி, மற்றும் விரைவு குளுக்கோஸ் பரிசோதனைகளை மேற்கொண்டனர். பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பின் கீழ் இந்த முகாம் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758500

*****************

 (Release ID: 1758568) Visitor Counter : 250