சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாக்பூர் எய்ம்ஸ் 3வது நிறுவன தினம் கொண்டாட்டம்: திரு நிதின்கட்கரி மற்றும் டாக்டர் பாரதி பிரவின் பவார் தலைமை தாங்கினர்
Posted On:
26 SEP 2021 1:10PM by PIB Chennai
நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் 3வது நிறுவன தினத்தை குறிக்கும் டிஜிட்டல் நிகழ்ச்சிக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் முன்னிலையில் தலைமை தாங்கினார்.
நாக்பூர் எய்ம்ஸ் தலைவர், இயக்குனர், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த, திரு நிதின்கட்கரி கூறியதாவது:
விதர்பா பகுதியின் தேவையை கருத்தில் கொண்டு, நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய இந்திய மாநிலங்களின் எல்லைகளில் உள்ள நோயாளிகள் குறைந்த செலவில், நவீன மருத்துவ வசதிகளை பெற முடியும். இந்த வசதிகள் நகர்ப்புற மக்களுக்கு மட்டும் கிடைக்காமல், நமது பகுதியின் தொலைதூர கிராமங்களில் உள்ளவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சமீபத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் நீண்டகாலமாக இருந்த பிராந்திய சமநிலையற்ற தன்மையை சரிசெய்யும் விதத்தில் அமைக்கப்பட்டன. தற்போதுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது, இந்தியாவின் விருப்பங்களுக்கு சிறந்த சேவையாற்றும்.
இவ்வாறு திரு நிதின்கட்கரி கூறினார்.
மத்திய அரசின் முயற்சிகள் காரணமாக, நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கும் உயர்த்தர மருத்துவ சிகிச்சை கிடைப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்த டாக்டர் பிரவின் பவார், சுதந்திரத்துக்குப்பின் பல தசாப்தங்கள் ஆகியும், நாட்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே கட்டப்பட்டது நம் அனைவரும் தெரியும். 2014ம் ஆண்டுக்குப்பின், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்க கொள்கை உருவாக்கப்பட்டது’’ என்றார்.
தனது மருத்துவர் அனுபவத்திலிருந்து, மருத்துவ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய டாக்டர் பிரவின் பவார், ‘‘மருத்துவ மாணவர்கள், நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வது முக்கியம். இது சுகாதார குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் முக்கிய பொறுப்பு’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758237
------
(Release ID: 1758329)