சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

எய்ம்ஸ் 66-வது நிறுவன தின விழாவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பவார் புது தில்லியில் தொடங்கி வைத்தனர்

Posted On: 25 SEP 2021 3:42PM by PIB Chennai

புதுதில்லி எய்ம்ஸின் 66-வது நிறுவன தின விழாவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரும் எய்ம்ஸ் தலைவருமான திரு மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பவாரின் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார். 1956-ம் ஆண்டு இதே தினத்தில் தான் எம்பிபிஎஸ் வகுப்புகள் எய்ம்ஸில் தொடங்கின.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பவார், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பொது சேவையில் முன்னணியில் இருக்கும் எய்ம்ஸின் தன்னலமற்ற முயற்சிகளைப் பாராட்டினார். "இந்தியாவில் 1994-ல் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை, 2005-ல் முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை, 2014-ல் முதல் டிஎம்ஜே (மொத்த டெம்போரோமாண்டிபுலர் மூட்டு) மாற்று ஆகியவற்றில் பெருமதிப்பை ஈட்டியுள்ள எய்ம்ஸ், கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளிகள் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது,” என்றார்.

ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு 33 விருதுகள் மற்றும் பதக்கங்களை விழாவில் அமைச்சரும் இணை அமைச்சரும் வழங்கினர். தமது ஆரம்பகால வாழ்க்கையில் திருமதி இந்திரா காந்தியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியதற்காக பாராட்டப்பட்ட நிகழ்வை திரு மாண்டவியா விவரித்தார். அவரது கட்டுரைக்கு கிடைத்த பாராட்டு அவரை மேலும் முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவித்து படிப்படியாக அவரை இன்றைய நிலைக்கு வடிவமைத்தது என்று அமைச்சர் கூறினார்.

ராக் கட்டிடத்தில் உயர் ஆய்வகத்தை டிஜிட்டல் முறையில் மத்திய சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார். ஐம்பது ஆய்வக சோதனைகளை நடத்தி 2-3 மணி நேரத்தில் முடிவுகளை அளிக்கும் வசதியை இது கொண்டிருக்கிறது.

"டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவக் கல்வி" என்ற பொருட்காட்சியை இணை அமைச்சருடன் இணைந்து அவர் தொடங்கி வைத்தார். இது தொடர்பான காட்சிப்பொருட்கள் அனைத்து துறைகளாலும் காட்சிப்படுத்தப்பட்டன

https://youtu.be/FZ1q1F40LVY எனும் முகவரியில்

இந்த நிகழ்வு இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது:

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758022

*****************



(Release ID: 1758127) Visitor Counter : 199