எரிசக்தி அமைச்சகம்
சிக்கிம் மாநிலத்தில் உள்ள என்எச்பிசி நிறுவனத்தின் டீஸ்டா-V மின் நிலையத்துக்கு சர்வதேச விருது
प्रविष्टि तिथि:
24 SEP 2021 9:28AM by PIB Chennai
சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின்சக்தி நிறுவனத்தின் (என்எச்பிசி) 510 மெகா வாட் டீஸ்டா-V மின் நிலையத்துக்கு, லண்டனில் உள்ள சர்வதேச நீர் மின்சக்தி அமைப்பின் (IHA), கவுரமிக்க ‘ப்ளூ ப்ளானட் பரிசு’ கிடைத்துள்ளது. இந்த ஐஎச்ஏ அமைப்பு, 120 நாடுகளில் செயல்படுகிறது.
இந்த மின்நிலையம் என்எச்பிசி நிறுவனத்துக்கு சொந்தமானது. நேற்று நடந்த உலக நீர்மின்சக்தி மாநாடு 2021-ல் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757522
*****************
(रिलीज़ आईडी: 1757693)
आगंतुक पटल : 297