பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

விமானப்படைக்கு 56 சி-295 எம்டபிள்யூ போக்குவரத்து விமானங்கள் வாங்க, ஸ்பெயின் ஏர்பஸ் டிபன்ஸ் & ஸ்பேஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

Posted On: 24 SEP 2021 12:54PM by PIB Chennai

இந்திய விமானப்படைக்கு,  56 சி-295 எம்டபிள்யூ போக்குவரத்து விமானங்கள் வாங்க, ஸ்பெயின் ஏர்பஸ் டிபன்ஸ் & ஸ்பேஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஒப்பந்தம் செய்தது. மேலும், தகுதியான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை  இந்திய நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும் எனவும் ஏர்பஸ் டிபன்ஸ் & ஸ்பேஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு, இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

முக்கிய அம்சங்கள்:

* இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானப் பிரிவை நவீனப்படுத்துவதில் மிகப் பெரிய நடவடிக்கை.

* 5-10 டன் எடையுள்ள இந்த விமானங்கள், தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் இருக்கும்.

இந்த விமான தயாரிப்புக்கான தகுதியான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இந்திய நிறுவனங்களிடம் இருந்து ஏர்பஸ் நிறுவனம் நேரடியாக கொள்முதல் செய்யும்.

* இதன் மூலம் இந்திய தனியார் நிறுவனங்கள்தொழில்நுட்பம் அதிகம் உள்ள விமான தொழிலுக்குள் நுழைய தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757634

****(Release ID: 1757689) Visitor Counter : 261