பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய ராணுவத்தின் வெற்றி கலாச்சார திருவிழா: கொல்கத்தாவில் செப்டம்பர் 26-ஆம் தேதி துவக்கம்

Posted On: 23 SEP 2021 3:20PM by PIB Chennai

டிசம்பர் 16, 2021, வங்கதேசத்தின் விடுதலை மற்றும் 1971-ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி ஆகியவற்றின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் தினமாகும். இந்திய வரலாற்றில் இந்த பிரசித்தி பெற்ற நிகழ்வைப் போற்றும் வகையில் பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

போரின்போது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நிலவிய கலாச்சார இணைப்பை எடுத்துரைப்பதற்காக வெற்றி கலாச்சார திருவிழாவை கொல்கத்தாவில் செப்டம்பர் 26-29 நடத்த இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம்  திட்டமிட்டுள்ளது. திரைப்படங்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், வாத்திய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏராளமான கலாச்சார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற இந்திய ராணுவத்தின் துணிச்சல்மிக்க வீரர்கள் பற்றி ஏராளமான நிகழ்ச்சிகளின் வாயிலாக இந்தத் திருவிழாவில் எடுத்துரைக்கப்படும்.

கிழக்கு கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, செப்டம்பர் 26-ஆம் தேதி இந்த திருவிழாவைத் துவக்கி வைப்பார். பழங்கால வாகனங்கள், கிழக்கு கட்டுப்பாட்டு மையத்தின் உபகரணங்களும் இதில் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757255

*****************



(Release ID: 1757356) Visitor Counter : 164