சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனாவுக்கு பிந்தைய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
Posted On:
23 SEP 2021 12:42PM by PIB Chennai
கொரோனாவுக்கு பிந்தைய வழிகாட்டு விதிமுறைகளை, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் முன்னிலையில் இன்று வெளியிட்டார். கொரோனாவின் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்ள, நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும், துணை மருத்துவ ஊழியர்கள் அடங்கிய அமைப்பை உருவாக்க இந்த வழிகாட்டு விதிமுறைகள் உதவும்.
இந்த வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
கொரோனாவின் நீண்ட கால பாதிப்புகளை சமாளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க இந்த விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச பக்க விளைவுகள் மற்றும் எதிர்மறை விளைவுகள் இல்லாத சிகிச்சைக்கு செயல்திறனுடன் கூடிய விரிவான சிகிச்சை தேவைப்படுகிறது. கொவிட் சிகிச்சைக்கு அதிக அளவிலான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டவர்களுக்கு மியூகோமைகோசிஸ் பாதிப்புகள் ஏற்பட்டதை நாம் பார்த்தோம்.
குறைவான மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை எடுத்துக் கொள்வது முக்கியம்.
இவ்வாறு திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பாரதி பிரவீன் பவார், ‘‘மனநல பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது. கடைக்கோடி மக்களுக்கும் சிகிச்சை சென்றடைய வேண்டும். இந்த பெருந்தொற்று, நமது சுகாதாரம் மற்றும் சுகாதார அமைப்பில் இதற்கு முன் ஏற்படாத சவால்களை ஏற்படுத்தியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு, மன நல சிகிச்சையும் மிகப் பெரிய சவால்’’ என கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757207
*****************
(Release ID: 1757352)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam