பிரதமர் அலுவலகம்

உலக கோவிட்-19 உச்சிமாநாட்டில் பிரதமரின் கருத்துக்கள்; தொற்றுக்கு முடிவு கட்டி, அடுத்த கட்டத்துக்கு தயாராக சிறந்த சுகாதார பாதுகாப்பைக் கட்டமைக்க வேண்டும்

Posted On: 22 SEP 2021 10:49PM by PIB Chennai

மேதகு தலைவர்களே, கோவிட்-19 முன்னெப்போதும் கண்டிராத தடங்கலாக உருவெடுத்துள்ளது. அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. உலகின் பெரும் பகுதியில்  இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அதனால், சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள அதிபர் பைடனின் இந்த முயற்சியை வரவேற்கிறேன்.

மேதகு தலைவர்களே, இந்தியா எப்போதும் மனிதகுலத்தை ஒரு குடும்பமாகப் பார்க்கிறது. இந்தியாவின் மருந்து உற்பத்தி தொழில் துறை, குறைவான விலையில், பரிசோதனை கருவிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பிபிஇ கருவிகள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இவை பல வளரும் நாடுகளுக்கு கட்டுப்படியான முறையில் வழங்கப்படுகின்றன. நாங்கள் மருந்துகளையும், மருத்துவ பொருள் வினியோகத்தையும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கியுள்ளோம். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி உள்ளிட்ட, இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.

பல்வேறு இந்திய நிறுவனங்கள், உரிமங்களுடன்  பல்வேறு மருந்துகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன.

இந்த ஆண்டின் துவக்கத்தில், நாங்கள் எங்களது தடுப்பூசி தயாரிப்பை 95 நாடுகளுடனும், .நா அமைதிப் படையிடனும் பகிர்ந்து கொண்டோம்ஒரு குடும்பம் போல, நாங்கள் இரண்டாவது அலையைச் சந்தித்த போது, உலகமே இந்தியாவின் பக்கம் நின்றது. இந்தியாவுக்கு அளித்த ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

மேதகு தலைவர்களே, இந்தியா தற்போது உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை நடத்தி வருகிறது. அண்மையில், ஒரே நாளில் 25 மில்லியன் பேருக்கு நாங்கள் தடுப்பூசி செலுத்தினோம். எங்களது அடிமட்ட சுகாதார அமைப்பு இதுவரை 800 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ளது.

200 மில்லியன் இந்தியர்களுக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோ-வின் என்ற எங்களது புதுமையான டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தியதன் மூலம்  இது சாத்தியமானது.

பகிர்ந்து கொள்ளுதல் என்ற எழுச்சியுடன், கோ-வின் மற்றும் பல டிஜிட்டல் தீர்வுகளை வெளிப்படையான மென்பொருள் ஆதாரமாக, இலவசமாக இந்தியா வழங்கி வருகிறது.

மேதகு தலைவர்களே, புதிய இந்திய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதால், தற்போதைய தடுப்பூசிகளின் உற்பத்தி திறனை நாங்கள் அதிகரித்து வருகிறோம்.

எங்களது உற்பத்தி அதிகரிப்பதால், மற்றவர்களுக்கும் எங்களது தடுப்பூசி விநியோகத்தை எங்களால் மீண்டும் துவக்க முடியும். இதற்கு, மூலப் பொருட்கள் விநியோகச் சங்கிலி தடையின்றி செயல்பட வேண்டும்.

எங்களது குவாட் அமைப்பின் கூட்டு நாடுகளுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு தடுப்பூசி தயாரிக்கும் இந்தியாவின் உற்பத்தி வலிமையை நாங்கள் அதிகரித்து வருகிறோம்.

கோவிட் தடுப்பூசிகள், பரிசோதனைகள் மற்றும் மருந்துகளுக்கு அறிவுசார் சொத்துரிமை தொடர்பான அம்சங்கள் உடன்பாட்டில் தள்ளுபடி தேவை என்பதை  உலக சுகாதார அமைப்பில் எழுப்ப இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் உத்தேசித்துள்ளன.

இது பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை அதிக அளவில் அதிகரிக்க உதவும். தொற்றால் உருவாகியுள்ள பொருளாதார விளைவுகளை சமாளிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு, பரஸ்பர தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதன் மூலம், சர்வதேச பயணம் எளிதாக்கப்பட வேண்டும்.

மேதகு தலைவர்களே, இந்த உச்சிமாநாட்டின் நோக்கங்களையும், அதிபர் பைடனின்  தொலைநோக்கையும் நான் மீண்டும் ஆமோதிக்கிறேன்.

பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர, உலகத்துடன் பாடுபட இந்தியா உறுதியுடன் தயாராக உள்ளது.  

நன்றி, மிக்க நன்றி

   

***



(Release ID: 1757267) Visitor Counter : 187