சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 250-வது நாள்: 83 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இது வரை செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது

Posted On: 22 SEP 2021 7:54PM by PIB Chennai

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 83 கோடிக்கும் அதிகமானோருக்கு (83,33,46,676) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 64 லட்சத்திற்கும் அதிகமான (64,98,274) தடூப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்கான இறுதி அறிக்கைகள் இன்று பின்னரவில் நிறைவு செய்யப்படும்.

இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 1,03,70,167 பேருக்கு முதல் டோசும், 87,83,665 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1,83,47,221 பேருக்கு முதல் டோசும், 1,46,66,596 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 33,74,76,070 பேருக்கு முதல் டோசும், 6,67,81,067 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் பேருக்கு 15,36,39,648 முதல் டோசும், 7,14,56,603 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 9,82,67,915 பேருக்கு முதல் டோசும், 5,35,57,724 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 61,81,01,021 முதல் டோசுகளும் 21,52,45,655 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் (2021 செப்டம்பர் 22), சுகாதார பணியாளர்களில் 329 பேருக்கு முதல் டோசும், 15,310 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 518 பேருக்கு முதல் டோசும், 46,969 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 25,64,082 பேருக்கு முதல் டோசும், 19,93,893 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் பேருக்கு 6,21,778 முதல் டோசும், 6,42,742 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3,08,421 பேருக்கு முதல் டோசும், 3,04,232 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 34,95,128 முதல் டோசுகளும் 30,03,146 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன

கொவிட்-19 இடமிருந்து மக்களை காப்பாற்றக்கூடிய கருவியாக தடுப்புமருந்து வழங்கல் இருப்பதால், உயர்மட்ட அளவில் அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757065

 

----


(Release ID: 1757104) Visitor Counter : 219