விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கரீஃப் பருவத்தில் சாதனை அளவாக 150.50 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி மதிப்பிடப்பட்டுள்ளது

Posted On: 21 SEP 2021 5:36PM by PIB Chennai

2021-22-ஆம் ஆண்டுக்கான முக்கிய கரீஃப் பருவப்பயிர்களின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உணவு தானியங்களின் மொத்த விளைச்சல் 150.50 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், “இந்தப் பெருவிளைச்சல் நமது விவசாயிகளின் ஓய்வற்ற உழைப்பு, விஞ்ஞானிகளின் திறமை மற்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசின் விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகள் ஆகியவற்றின் பலன்களாகும்,” என்றார்.

2021-22-ஆம் ஆண்டுக்கான முக்கிய கரீஃப் பயிர்களின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின் விவரங்கள் வருமாறு:

உணவு தானியங்கள் - 150.50 மில்லியன் டன். (சாதனை)

அரிசி - 107.04 மில்லியன் டன். (சாதனை)

ஊட்டச்சத்துமிக்க/ கோர்ஸ் தானியங்கள் - 34.00 மில்லியன் டன்

மக்காச்சோளம் - 21.24 மில்லியன் டன்

பருப்பு வகைகள் - 9.45 மில்லியன் டன்

துவரம் பருப்பு- 4.43 மில்லியன் டன்

எண்ணெய் வித்துக்கள் - 23.39 மில்லியன் டன்

நிலக்கடலை - 8.25 மில்லியன் டன்

சோயாபீன்ஸ் - 12.72 மில்லியன் டன்

பருத்தி - 36.22 மில்லியன் பேல்கள் (ஒவ்வொன்றும் 170 கிலோ) (சாதனை)

சணல் & மேஸ்தா – 9.61 மில்லியன் பேல்கள் (ஒவ்வொன்றும் 180 கிலோ)

கரும்பு - 419.25 மில்லியன் டன் (சாதனை)

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756743

----


(Release ID: 1756823) Visitor Counter : 286