தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

அணுகக்கூடிய தேர்தல்கள் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது தேர்தல் ஆணையம்

Posted On: 21 SEP 2021 5:43PM by PIB Chennai

அணுகக்கூடிய தேர்தல்கள் 2021 என்ற மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் காணொலி வாயிலாக இன்று நடத்தியது. தலைமைத் தேர்தல் அதிகாரிகள், பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் சார்பாக பொது சமூக நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள்

தேர்தல் நடைமுறைகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக அவர்கள் சந்திக்கும் தடைகளை எதிர்கொள்வதற்கான உத்திகள் தொடர்பாக ஆலோசிப்பதும், அணுகுவது சம்பந்தமாக தற்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை மதிப்பீடு செய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். 

தேர்தல்களை மேலும் உள்ளடக்கியதாகவும், அணுகக் கூடிய வகையிலும், வாக்காளர்களுக்கு எளிதான முறையிலும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதித்தன்மையை வலியுறுத்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, தேர்தல் நடைமுறைகளில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வாக்காளர்களாகிய முதன்மை பங்குதாரர்களின் முடிவு எடுக்கும் பணிக்கு ஆணையம் மதிப்பளிப்பதாகக் கூறினார். தேர்தல் நடைமுறையில், ஒவ்வொரு நிலையிலும் உள்ளடக்கம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக வழிகாட்டுதல்களை கட்டமைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வாக்குகளை செலுத்துவதில் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சுமுகமான மற்றும் கண்ணியமான அனுபவத்தை வழங்குவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து மையங்களிலும் கீழ்தளத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் திரு சுஷில் சந்திரா குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையர்கள் திரு ராஜீவ் குமார், திரு அனுப் சந்திரா, செயலாளர் திரு உமேஷ் சின்ஹா ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756750

-----


(Release ID: 1756815) Visitor Counter : 255