வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்துத் துறையில் பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பு

Posted On: 21 SEP 2021 2:40PM by PIB Chennai

பெட்ரோலிய மையங்கள், வெடிபொருள்கள் உற்பத்தி மையங்கள், எரிவாயு சிலிண்டர் நிரப்பும் மற்றும் சேமிக்கும் மையங்கள் போன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத்துறை சமீபத்தில் சீர்திருத்தங்களை அமல்படுத்தியதுஇதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தொழில் செய்வதற்கான செலவு குறைக்கப்பட்டுஉள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நோக்கில், கொள்கைகள், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு அமைப்புடன், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத்துறை இணைந்து செயல்பட்டதாக அதன் கூடுதல் செயலாளர் திருமிகு. சுமிதா தாவ்ரா கூறியுள்ளார்.

நிலையான மற்றும் இயங்கு அழுத்தக் கலன்கள், கால்சியம் கார்பைடு, அம்மோனியம் நைட்ரேட், கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் போன்ற ஐந்து முக்கிய துறைளில் விதிமுறைகள், சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டனஅதன்பின் கருத்துக்கள் பெறப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்தக் குறிப்பிட்ட சீர்த்திருத்தங்களின் முக்கிய அம்சங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756697


(Release ID: 1756793) Visitor Counter : 260