எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி விலை குறைப்பின் நிலவரம் குறித்து மத்திய எஃகு அமைச்சர் ஆய்வு

Posted On: 21 SEP 2021 9:38AM by PIB Chennai

பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி விலை குறைப்பின் நிலவரம் மற்றும் எதிர்கால செயல் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் தலைமையில் எஃகு துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுடன் நேற்று மாலை நடைபெற்றது.

உற்பத்தி செலவை பாதிக்கும் அளவுருக்களை குறுகிய அளவில் பகுப்பாய்வு செய்வதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், பாதகமான சூழ்நிலைகளையும் வாய்ப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கூறினார். செலவுகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சுட்ட நிலக்கரியின் விலை குறைப்பு, சுட்ட நிலக்கரியின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக சிறு உருண்டைகளின் உபயோகம் அதிகரிப்பு, உற்பத்தி செலவு குறைப்பு போன்ற முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற தொழில்நுட்ப- பொருளாதார அளவுருக்கள் எஃகு தகவல் பலகையின் மூலம் மாதந்தோறும் கண்காணிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756605

*****(Release ID: 1756706) Visitor Counter : 82