ஜவுளித்துறை அமைச்சகம்

அரசு மின்னணு சந்தை தளத்தில் 28,374 கைவினைஞர்கள் மற்றும் 1,49,422 நெசவாளர்கள் பதிவு செய்துள்ளனர்

Posted On: 20 SEP 2021 4:47PM by PIB Chennai

நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக அரசு மின்னணு சந்தை தளத்தின் வாயிலாக தங்களது பொருட்களை அரசு துறைகளுக்கு நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு சந்தைகளை அணுகுவதில் சவால்களை சந்தித்து வரும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் ஈடுபட்டு வரும் கைவினைஞர்கள், நெசவாளர்கள், சிறிய ரக தொழில்முனைவோர், பெண்கள், பழங்குடி தொழில்முனைவோரின் பங்களிப்பை இந்த முயற்சி அதிகரிக்கும்.

ஆகஸ்ட் 30, 2021 வரை 28,374 கைவினைஞர்கள் மற்றும் 1,49,422 நெசவாளர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர். அரசு மின்னணு சந்தை தளத்தில் விற்பனையாளர்கள் பதிவுசெய்யவும், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை இணைக்கும் பணி கடந்த ஜூலை 2020-இல்  தொடங்கியது. கைவினை சேவை மையங்களைச் சேர்ந்த 56 அதிகாரிகள் மற்றும் நெசவாளர் சேவை மையங்களைச் சேர்ந்த 28 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கைத்தறிப் பொருட்களுக்காக 28 பிரத்தியேக பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கைவினைப் பொருட்களுக்கு 170 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய கைத்தறி (https://gem.gov.in/landing/landing/india_handloom) மற்றும் கைவினைப் பொருட்களுக்காக (https://gem.gov.in/india-handicraft) பிரத்தியேக சந்தைத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.‌ கைவினைஞர்கள், நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள், சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட உயர்தர கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்களை பல்வேறு அரசு துறைகள் வாங்குவதற்கு ஏதுவாக இந்த சந்தைத் தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756422

*****************



(Release ID: 1756469) Visitor Counter : 251