கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவஹர்லால் நேரு துறைமுக கழகத்தில் கன்டெய்னர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்

Posted On: 20 SEP 2021 1:14PM by PIB Chennai

ஜவஹர்லால் நேரு துறைமுக கழகத்தில், கன்டெய்னர் ரயில் சேவையை, மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் இன்று காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் மூலம் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து கன்டெய்னர்கள், ரயில் மூலம் கான்பூரில் உள்ள உள்நாட்டு கன்டெய்னர் கிடங்குக்கு(ஐசிடி) சென்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து இரட்டை அடுக்கு கன்டெய்னர் ரயில் சேவை தொடக்கம், ஏற்றுமதி, இறக்குமதி சரக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியமான நடவடிக்கை என்றார். இது ஜவஹர்லால் துறைமுக கழகத்தில், சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிப்பதோடு, ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபடுவர்களுக்கு போக்குவரத்து செலவை குறைக்கும் என அவர் கூறினார்கன்டெய்னர்கள், துறைமுகத்துக்கு ஏற்றதாகவும், இந்தியாவில் குறைந்த செலவில் தயாரிக்க கூடியதாகவும் இருக்கும். இதன் மூலம் கன்டெய்னர்கள் இந்தியாவில் தயாரிக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்

கன்டெய்னர் ரயில்கள் மற்றும் கன்டெய்னர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், சாலை வழியாக சரக்கு போக்குவரத்து குறையும், துறைமுகங்களுக்கு நேரடியாக விநியோகிப்பதை ஊக்குவிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756383

*****

 

(Release ID: 1756383)


(Release ID: 1756409) Visitor Counter : 246