எஃகுத்துறை அமைச்சகம்

பேச்சுப் போட்டியின் வாயிலாக விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டம்: இந்திய எஃகு ஆணையகத்தின் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலை ஏற்பாடு

Posted On: 19 SEP 2021 9:26AM by PIB Chennai

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தை முன்னிட்டு மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய எஃகு ஆணையகத்தின் ஒரு பிரிவான விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலை, பத்ராவதியின் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, “இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு: என்னை பொறுத்தவரை சுதந்திரம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் ஆங்கில பேச்சுப் போட்டியை நடத்தியது. 15 பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலையும் எஸ்ஏவி நிறுவனங்களின் குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை ஆலையின் தலைமை பொது மேலாளர் (செயல்பாடுகள்) திரு கே எஸ் சுரேஷ், பொது மேலாளர் (தனிநபர் மற்றும் நிர்வாகம்), திரு பி.பி. சக்கரவர்த்தி, எஸ்ஏவி ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திரு பி.என். கிரிஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756178

                                                                                                                              ------

 



(Release ID: 1756256) Visitor Counter : 259