பிரதமர் அலுவலகம்
பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததற்காக குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் இதர உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
प्रविष्टि तिथि:
17 SEP 2021 8:34PM by PIB Chennai
தமக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததற்காக குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் இதர உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
“மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே, தங்களது விலைமதிப்பில்லா வாழ்த்துகளுக்கு மனப்பூர்வ நன்றி,” என்று குடியரசு தலைவருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
“மனப்பூர்வ வாழ்த்துகளுக்கு நன்றி குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவர்களே,” என்று குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
“வாழ்த்துகளுக்கு நன்றி அதிபர் கோத்தபயா,” என்று இலங்கை அதிபருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
“தங்களது அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று நேபாள பிரதமருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
“எனது நண்பர் பிரதமர் ராஜபக்சேவுக்கு வாழ்த்துகளுக்காக நன்றி,” என்று இலங்கை பிரதமருக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
“உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றியுடையவனாவேன்,” என்று டொமினிசியா பிரதமருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
“நன்றி திரு கே பி சர்மா ஒலி,” என்று நேபாள முன்னாள் பிரதமருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1755927)
आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam