எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் மின் திட்டங்களை மேற்பார்வையிட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன: மின்துறை அமைச்சகம்

प्रविष्टि तिथि: 17 SEP 2021 1:37PM by PIB Chennai

மத்திய அரசின் மின் திட்டங்களை மேற்பார்வையிட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன என மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த குழுக்கள் அமைப்பதற்கான உத்தரவை மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளிலும், இந்த குழுக்களின் தாக்கம் இருக்கும். நாட்டில் மின்துறை சீர்திருத்தங்கள், அதன் அமலாக்கம் நடவடிக்கைகளை  மேற்பார்வையிடுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த குழுவின் தலைவராக, மாவட்டத்தின் மூத்த எம்.பி. இருப்பார்.

இந்த மாவட்ட குழு, மாவட்ட தலைமையகத்தில், குறைந்தது 3 மாதத்துக்கு ஒரு முறை கூடி திட்ட பணிகளை ஆய்வு செய்யும் மற்றும் மாவட்ட மின்விநியோக உள்கட்டமைப்பின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755697

*****************


(रिलीज़ आईडी: 1755866) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Kannada , Malayalam