எஃகுத்துறை அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: பொறியாளர் தினம் தொழில்நுட்பம் சார்ந்த வினாடி வினாவுடன் கொண்டாடப்பட்டது

Posted On: 17 SEP 2021 12:08PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் டாக்டர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் 162வது பிறந்த தினம் ஆகியவற்றை கொண்டாட, ‘டெக் க்வெஸ்ட் 1.0’ என்ற வினாடி வினா செயில்-பிலால் எஃகு ஆலையின் மனிதவள துறையால் நடத்தப்பட்டது.

தொழில்நுட்பம் மற்றும் பொறியியலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆடியோ-வீடியோ வினாடி வினாவின் தகுதிச் சுற்றில், இருவர் அடங்கிய 30 குழுக்கள் பங்கேற்றன. இதில் இறுதி போட்டிக்கு 6 குழுக்கள் சென்றன.

தொழில்நுட்பம் மற்றும் பொறியியல்  அறிவை சுவாரஸ்யமான விதத்தில் பகிர வேண்டும் என செயல் இயக்குனர் திரு எஸ்.கே. துபே தெரிவித்த கருத்தின் விளைவாக இந்த வினாடி வினா நடத்தப்பட்டது.

*****************



(Release ID: 1755772) Visitor Counter : 183