பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய மாணவர் படையை விரிவாக ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட நிபுணர் குழு அமைப்பு, தோனி உள்ளிட்டோர் நியமனம்

Posted On: 16 SEP 2021 3:14PM by PIB Chennai

மாறிவரும் காலங்களுக்கேற்ப தேசிய மாணவர் படையை மாற்றியமைப்பதற்காக, அதை விரிவாக ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட நிபுணர் குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு பய்ஜெயந்த் பாண்டா தலைமையில் பாதுகாப்பு அமைச்சகம் அமைத்துள்ளது.

தேசத்தை கட்டமைப்பதிலும் நாட்டின் வளர்ச்சியிலும் இன்னும் சிறப்பான பங்காற்றும் வகையில் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், முன்னாள் உறுப்பினர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்கும், சர்வதேச இளைஞர் அமைப்புகளுக்கு இணையாக தேசிய மாணவர் படையை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை இக்குழு பரிந்துரைக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு பய்ஜெயந்த் பாண்டா தலைமையிலான இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்னல் (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் மற்றும் திரு வினய் சஹஸ்ரபுத்தே, மகிந்திரா குழுமத்தில் தலைவர் திரு ஆனந்த் மகிந்திரா, கிரிக்கெட் வீரர் திரு மகேந்திர சிங் தோனி, நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் திரு சஞ்சீவ் சன்யால், ஜாமிய மிலிய இஸ்லாமிய துணை வேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தர், எஸ் என் டி டி மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் வசுதா காமத், பாரதிய சிக்‌ஷன் மண்டலின் தேசிய அமைப்பு செயலாளர் திரு முகுல் கனித்கர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அலோக் ராஜ், டி சி சி தலைவர் திரு மிலிந்த் காம்ப்ளே, எஸ் எஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு ரிதுராஜ் சின்ஹா, வாட்டர்.ஓஆர்ஜி தலைமை செயல்பாட்டு அலுவலர் திருமிகு வேதிகா பண்டார்கர் மற்றும் டாடாபுக் தலைமை செயல் அதிகாரி திரு ஆனந்த் ஷா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

பாதுகாப்பு துறை இணை செயலாளர் (பயிற்சி) திரு மயன்க் திவாரி தேசிய மாணவர் படையை மாற்றியமைப்பதற்காக, அதை விரிவாக ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755423

 

-----

 



(Release ID: 1755523) Visitor Counter : 222