சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 16 SEP 2021 9:09AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 76.57 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.03%.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,42,923 ஆகும்.

இந்தியாவின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,51,087 ஆக உள்ளது

குணமடைபவர்களின் எண்ணிக்கை 97.64 விழுக்காடாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 38,303 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,25,60,474பேர் குணமடைந்துள்ளனர்.

வாராந்திரத் தொற்று உறுதி விழுக்காடு (1.93%) 83 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

தினசரித் தொற்று உறுதி வீதம் (1.94%) 17 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.77 கோடியாகும்.



(Release ID: 1755390) Visitor Counter : 197