ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பான மற்றும் தரமான ASU & H மருந்துகள் பற்றிய உலகளாவிய சமூகத்தின் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒத்துழைப்பு

ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் அமெரிக்க மூலிகை மருந்தியல் ஆணையத்துடன் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 15 SEP 2021 10:38AM by PIB Chennai

ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றநடவடிக்கையாக, ஆயுஷ் அமைச்சகம் உலகளவில் ஆயுர்வேத மற்றும் பிற இந்திய பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் தரத்தை வலுப்படுத்தவும், அவற்றின் ஏற்றுமதி திறனை மேம்படுத்தவும், குறிப்பாக அமெரிக்க சந்தைக்கு வழி வகுத்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (பிசிஐஎம் &எச்) மற்றும் அமெரிக்காவின் அமெரிக்க மூலிகை மருந்தியல் ஆகியவற்றின் முயற்சியால் 13 செப்டம்பர், 2021ல் செய்து கொள்ளப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் பரஸ்பர பயன் அடிப்படையில், ஆயுர்வேதம் மற்றும் பிற இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் தரத்தை வலுப்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதலுக்காக ஆயுஷ் அமைச்சகத்தினால் காணொலி மூலம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் ஏற்றுமதி திறனை மேம்படுத்தும் நீண்ட கால ஒத்துழைப்புக்கான முயற்சியாகும்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்கான ஆய்வுகள் மற்றும் இதர நடவடிக்கைகளை மேற்கொள்ள காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை உருவாக்க ஒரு கூட்டு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகளின் நம்பிக்கை வளர்ச்சி அடையும் என்று அமைச்சகம் கருதுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (பிசிஐஎம் &எச்) மற்றும் அமெரிக்காவின் அமெரிக்க மூலிகை மருந்தியல்ஆகிய இரண்டும் அமெரிக்காவில் ஆயுர்வேத பொருட்கள்/மூலிகைமருந்துகள் சந்தையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை அடையாளம் காண்பது இந்த கூட்டாண்மையின் முக்கிய பலன்களில் ஒன்றாகும். இந்த ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஆயுர்வேத தரத்தை அமெரிக்காவில் உள்ள மூலிகை மருந்து உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க வழிவகுக்கும். இதனை ஒரு பெரிய முன்னேற்றமாக குறிப்பிடப்படலாம்.

ஆயுர்வேதம் மற்றும் இதர இந்திய பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் மற்றும் மூலிகைப் பொருட்களின் ஆய்வு வளர்ச்சி, தரவுகளுக்கு இடையிலான உரிய ஒப்புதல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, மூலிகை மாதிரிகள், தாவரவியல் குறிப்பு மாதிரிகள் பரிமாற்றம் மற்றும் செடிகளின் தோற்ற வளர்ச்சி  முறை ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஆயுர்வேதம் மற்றும் பிற இந்திய பாரம்பரிய மருத்துவ பொருட்கள்/மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்கள் பற்றிய ஒரு டிஜிட்டல் தரவுதளத்தை உருவாக்குவது மற்றும் அவற்றின் தரங்களை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு ஆகியவை இதன் கூடுதல் அம்சமாக உள்ளது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆயுஷ் அமைச்சகம், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதர இந்திய பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் தரத்தை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் நடவடிக்கையாகும். ஆயுர்வேதம் மற்றும் இதர ஆயுஷ் மருந்துகள், இந்த நூற்றாண்டின் முக்கிய மாற்று பொருளான வாழ்க்கை முறை கோளாறுகளைக் கையாள்வதில் அதிகம் பங்களிக்கின்றன.

மேலும், ஆதாரங்களின் அடிப்படையில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் பரவலான நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பது பாராட்டத்தக்கது. இதன் பொதுப்படையான அணுகல், மலிவு, பாதுகாப்பு மற்றும் மக்களின் நம்பிக்கை காரணமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பாக இணையத் தொடர்பை இந்தியா பெற்றுள்ளது. இதனை உலகளவில் ஏற்றுக்கொள்ள, சர்வதேசஅளவில் ஊக்குவிப்பதற்கும் பரப்புவதற்கும் ஆயுஷ் அமைச்சகத்தின் கடமையாகும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆயுர்வேதம் மற்றும் இதர இந்திய பாரம்பரிய மருத்துவ பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் தரங்களின் பங்கை அங்கீகரிக்க இரு நாடுகளும் முயற்சிக்கும். பாரம்பரிய/மூலிகை மருந்துகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளின் தரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை அதிகரிப்பதையும் இருநாடுகளும் உறுதி செய்யும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754957

**



(Release ID: 1754957)


(Release ID: 1755028) Visitor Counter : 369