உள்துறை அமைச்சகம்

அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழமையான இந்தி, இணைந்து செயல்படுவதால் மட்டுமே வளர முடியும்: திரு அமித் ஷா

Posted On: 14 SEP 2021 7:01PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடைபெற்ற இந்தி தினம் 2021 கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழமையான இந்தி, இணைந்து செயல்படுவதால் மட்டுமே வளர முடியும் என்று கூறினார். அறிவை வெளிப்படுத்துவதற்கு தாய்மொழியை விட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர், பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் தாய்மொழியில் உரையாட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் குழந்தைகள் தங்களது வேர்களை விட்டு விலகிச் சென்று விடுவார்கள் என்றும் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை விடுதலையின் அம்ரித் மகோத்சவம் எனும் பெயரில் கொண்டாடி வருவதாக திரு அமித் ஷா கூறினார். 

புதிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அமைச்சர், தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் பொறியியல் படிப்புகள் கற்றுத் தரப்படும் என்றார்.

அலுவல் மொழியில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு விழாவின் போது அமைச்சர் விருதுகளை வழங்கினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754851



(Release ID: 1754905) Visitor Counter : 204