வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மீதான பேச்சுவார்த்தைகளை 2021 நவம்பர் 1 அன்று தொடங்க இந்தியா, இங்கிலாந்து திட்டம்

Posted On: 14 SEP 2021 3:37PM by PIB Chennai

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மீதான பேச்சுவார்த்தைகளை 2021 நவம்பர் 1 அன்று தொடங்க இந்தியாவும், இங்கிலாந்தும் திட்டமிட்டுள்ளன. இடைக்கால ஒப்பந்தத்தை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றவும், விரிவான ஒப்பந்தத்தில் பின்னர் கையெழுத்திடவும் இரு தரப்பும் எதிர்பார்க்கின்றன.

மத்திய வர்த்தகம் - தொழில்கள், ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. பியுஷ் கோயல், இங்கிலாந்து அமைச்சர் திருமிகு. எலிசபெத் டிரஸ் ஆகியோரிடையே நடைபெற்ற ஆலோசனையின் போது இது குறித்து விவாதிக்கபப்ட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகளுக்கு வழி வகுப்பதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான தங்களது உறுதியை இருதரப்பும் புதுப்பித்தன.

நிகழ்ச்சியில் பேசிய திரு. பியுஷ் கோயல், இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளின் வர்த்தக சமுதாயத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறினார். 2021 மே 4 அன்று மேம்படுத்தப்பட்ட வர்த்தகக் கூட்டை பிரதமர்கள் அறிவித்ததில் இருந்து, கூட்டின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இரு நாடுகளும் அடைந்துள்ளன என்று அவர் கூறினார்.

இரு தரப்பு வர்த்தகத்திலும் பொருளாதார நன்மைகள் விரைந்து ஏற்பட பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754767

 

----



(Release ID: 1754853) Visitor Counter : 242