பாதுகாப்பு அமைச்சகம்

குஜராத் வெள்ள நிவாரணப் பணிகளில் இந்தியக் கடற்படை

Posted On: 14 SEP 2021 1:00PM by PIB Chennai

குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மீட்பு உதவிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஐஎன்எஸ் சர்தார் பட்டேல் தளத்திலிருந்து இந்தியக் கடற்படையின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணக் குழு செப்டம்பர் 13-ஆம் தேதி ராஜ்கோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்காக மேலும் ஆறு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

அதே போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டு, தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஐஎன்எஸ் வல்சுராவிலிருந்து குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். படகுகள், கவச உடைகள், முதலுதவி உபகரணங்கள் மற்றும் தேவையான கருவிகளுடன் வயதானவர்கள், மகளிர் உள்ளிட்ட ஏராளமான மக்களை இந்தக் குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வெள்ளத்தால் சிக்கித் தவித்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் கடற்படைக் குழுவினர் வழங்கினார்கள்.

வெள்ள நிவாரணப் பணிகளில் தேவையான உதவிகளை அளிப்பதற்காக அரசு நிர்வாகத்துடன் மூத்த கடற்படை அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கேட்டறிகின்றனர். மேலும் சில மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754723

 



(Release ID: 1754779) Visitor Counter : 209