நிதி அமைச்சகம்
2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் மற்றும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளுக்கான கடைசி தேதிகள் நீட்டிப்பு
Posted On:
09 SEP 2021 7:24PM by PIB Chennai
வருமான வரி சட்டம், 1961-ன் கீழ் 2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் மற்றும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் வரி செலுத்துவோர் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, 2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் மற்றும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளுக்கான கடைசி தேதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. விவரங்கள் வருமாறு:
1. 2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 31-ல் இருந்து 2021 செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2021 டிசம்பர் 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. 2020-21-ம் வருடத்திற்கான தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30-ல் இருந்து 2021 அக்டோபர் 31 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. சர்வதேச பரிவர்த்தனை அல்லது சட்டத்தின் 92ஈ பிரிவின் கீழ் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட நபர்கள் 2020-21-ம் வருடத்திற்காக சமர்ப்பிக்க வேண்டிய கணக்காளரிடம் இருந்து பெற்ற அறிக்கைக்கான கடைசி தேதி 2021 அக்டோபர் 31-ல் இருந்து 2021 நவம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள 2021 செப்டம்பர் 9-ம் தேதியிட்ட சுற்றறிக்கை எண் 17/2021 in F.No.225/49/2021/ITA-II-ஐ www.incometaxindia.gov.in எனும் தளத்தில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753603
*****************
(Release ID: 1753660)
Visitor Counter : 452