மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நாட்டின் பண்புக்கு கல்வி முக்கியமான கருவி: திருமதி அன்னபூர்ணா தேவி

Posted On: 08 SEP 2021 12:40PM by PIB Chennai

நாட்டின் பண்புக்கு கல்வி முக்கியமான கருவி என மத்திய கல்வி இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கூறினார்.

ஆசிரியர்கள் விழா மாநாட்டை(ஷிக்சாக் பர்வ்), பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கடந்த 7ம் தேதி தொடங்கிவைத்து உரையாற்றினார்இந்த மாநாட்டை தொடர்ந்து, தொழில்நுட்ப அமர்வு, தற்போதைய ஆண்டின் கருப்பொருள்,   ‘‘தரமான மற்றும் நிலையான பள்ளிகள்: இந்தியாவில் உள்ள பள்ளிகளில் இருந்து கற்றல்’’ என்பது பற்றி நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி அன்னபூர்ணா தேவி கூறியதாவது:

நாட்டின் பண்புக்கு கல்வி முக்கியமான கருவி என்பதால், நாட்டின் வளர்ச்சி, கல்வியை சார்ந்து உள்ளதுஆகையால், குழந்தைகளின் திறன் மேம்பாடு அவசியமானது. ஆசிரியர்கள், குழந்தைகள் இருவரும் இணைந்து கற்பது முக்கியம். அவர்கள் உள்ளூர் திறமைகளை கற்க வேண்டும் மற்றும் தற்போதைய காலத்துக்கு பொருத்தும் வகையில் கல்வியை மாற்ற, அனுபவம் அடிப்படையிலான கற்றலை பெற வேண்டும்தரம் மற்றும் நிலைத்தன்மை, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்இந்த மாநாட்டின் மூலம் உருவாகும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள், நமது நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்கை நனவாக்க உதவும்.

இவ்வாறு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கூறினார்.

 

-----



(Release ID: 1753147) Visitor Counter : 126