மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
கர்நாடகாவில் இணைய இணைப்பை மேம்படுத்த பணிக்குழு: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
08 SEP 2021 11:27AM by PIB Chennai
அண்மையில் கர்நாடகாவின் 6 மாவட்டங்களில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் மேற்கொண்ட ஜன் ஆசிர்வாத் யாத்ராவின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் இணைய இணைப்பின் வேகம் மற்றும் அணுகலை மேம்படுத்துமாறு ஏராளமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்வதற்காக பணிக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து, இந்திய தேசிய இணையதள இணைப்பகம் (நிக்சி) மற்றும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (எஸ்டிபிஐ) ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு தனது பணியைத் தொடங்கியுள்ளது. இந்தக் குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்திப்பார்கள். மாநில அரசு அதிகாரிகளையும் சந்திக்கும் இந்தக் குழு, அமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753059
-----
(रिलीज़ आईडी: 1753142)
आगंतुक पटल : 269