சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் தொற்று காலத்தில் இந்தியாவின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் சியரோ கூட்டத்தில், மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உரையாற்றினார்
Posted On:
07 SEP 2021 3:36PM by PIB Chennai
கொவிட் தொற்று காலத்தில் இந்தியாவின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பிராந்திய அலுவலகம் (சியரோ) கூட்டத்தில், மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உரையாற்றினார்.
சியரோ அமைப்பின் 74-வது கூட்டத்தில், இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது:
கொவிட் -19 பெருந்தோற்று அதிகளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தியதோடு, மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் வெகுவாக பாதித்தது. தொற்றை சமாளிக்க, மாண்பு மிகு இந்திய பிரதமர் தலைமையில் மக்களை மையமாக கொண்ட அணுகுமுறை மூலம் முழுமையான நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டன. தேவையான சுகாதார நடவடிக்கைகளை தீர்மானிக்க, தயார்நிலை மற்றும் முந்தைய பொது சுகாதார அவசரநிலையை சமாளிக்க பயன்படுத்திய உத்திகள் பயன்படுத்தப்பட்டன.
பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் என்ற 5 தூண்களின் மீது தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவின் யுக்தி உருவாக்கப்பட்டது. பிரத்தியேக கொவிட் மருத்துவமனைகள், சுகாதார பணியாளர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.
நாடுமுழுவதும் தொற்று பாதிப்பை கண்காணிக்க ஐசிஎம்ஆர் பரிசோதனை இணையதளம், ஆரோக்கிய சேது செயலி, தடுப்பூசி நடவடிக்கைகளை கண்காணிக்க கோவின் இணையளம் போன்ற டிஜிட்டல் புத்தாக்கங்கள் உதவின.
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. பாதிக்க கூடியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது, இதர நாடுகளில் இருந்து கொவிட் தடுப்பூசிகள் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2வது டோஸ் போடுவதற்காகவும் கண்காணிக்படுகின்றனர். தடுப்பூசி செலுத்திவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களும் அளிக்கப்படுகின்றன. அனைத்து தரப்பினருக்கான விரிவான திட்டத்தை இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டம் விளக்குகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752822
----
(Release ID: 1752983)
Visitor Counter : 285