பாதுகாப்பு அமைச்சகம்

ஆளில்லா போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா கையெழுத்து

Posted On: 03 SEP 2021 12:41PM by PIB Chennai

ஆளில்லா போர் விமானம் தயாரிக்கும், திட்ட ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா பாதுகாப்புத்துறைகள் கையெழுத்திட்டுள்ளன.

பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் நடவடிக்கையில்(DTTI) வான் பாதுகாப்பு அமைப்பு கூட்டு செயற் குழு திட்டத்தின் கீழ், இந்த ஒப்பந்தம், கடந்த  ஜூலை 30ம் தேதி கையெழுத்தானது

பாதுகாப்பு உபகரணத்தை கூட்டாக உருவாக்குவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டுறவை, வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க நடவடிக்கை.

டிடிடிஐ திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கான தொழில்நுட்பங்கள், பரஸ்பர ஒப்பந்த திட்டங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளனஆளில்லா போர் விமானத்தை இணைந்து தயாரிப்பதற்கான திட்ட ஒப்பந்தம் டிடிடிஐ திட்டத்தில் மிக முக்கியமான சாதனை ஆகும்.

இந்த திட்ட ஒப்பந்தம், ஆளில்லா போர் விமானத்தின் மாதிரியை  இணைந்து உருவாக்குவதில்இந்திய விமானப்படை ஆய்வு கூடம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) ஆகியவை வடிவமைப்பு, உருவாக்கம், செய்முறை விளக்கம், பரிசோதனையில் கூட்டாக செயல்படுத்துதை சுட்டிக் காட்டுகிறது.

 

இந்த திட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தியதில், டிஆர்டிஓ-வின் ஏரோநாடிக்கல் வளர்ச்சி மையம்(ஏடிஇ), விமானப்படை ஆய்வு மையத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் இயக்குனரகம், இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் ஆகியவை முக்கிய அமைப்புகளாக உள்ளன.

டிடிடிஐ திட்டத்தின் கீழ் வான்பாதுகாப்பு அமைப்பு கூட்டு செயற்குழுவின் துணைத் தலைவர்களாக உள்ள இந்திய விமானப்படை  திட்டங்களுக்கான துணை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் நர்மதேஸ்வர் திவாரி, அமெரிக்க விமானப்படையின், விமானப்படை பாதுகாப்பு உதவி மற்றும் ஒத்துழைப்பு இயக்குனரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் பிரைன் ஆர்.ப்ரூக்பயூர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751648

******(Release ID: 1751648)(Release ID: 1751681) Visitor Counter : 78