ஆயுஷ்
azadi ka amrit mahotsav

முற்காப்பு மருந்துகள் வழங்கும் பிரச்சாரத்தை தொடங்கியது ஆயுஷ் அமைச்சகம்: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறப்பு கவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2021 5:38PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் நடவடிக்கைகளின் கீழ், முற்காப்பு மருந்துகள் மற்றும் உணவு மற்றும் வாழ்க்கைமுறைக்கான வழிகாட்டுதல்கள் வழங்கும்  பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகம் புதுதில்லியில் இன்று தொடங்கியது. 

இந்த நடவடிக்கையை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முன்ச்பரா மகேந்திரபாய் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

காணொலி காட்சி மூலம் உரையாற்றிய திரு சர்பானந்த சோனாவால், ‘‘அனைவருக்குமான சுகாதாரத்தை உறுதி செய்யும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் திட்டத்தை வழங்குவதை இந்த பிரச்சாரம் நோக்கமாக கொண்டுள்ளது. பெருந்தொற்றை எதிர்த்து போராட, 7 முக்கிய பணிகளை பிரதமர் பட்டியலிட்டுள்ளார். அதில் முதன்மையானது, முதியோர்களை பாதுகாப்பது.’’ என்றார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் முன்ச்பரா மகேந்திரபாய் பேசுகையில், ‘‘தற்போதைய பிரச்சாரம் 60-க்கு மேற்பட்ட வயதினர் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இது அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்’’ என்றார்.

ஒய்-பிரேக் கைப்பேசி செயலி, விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு மூலிகை கன்றுகள் வழங்குதல், இணையகருத்தரங்குகளை நடத்துதல் உட்பட பல நடவடிக்கைகளை கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல், செப்டம்பர் 5ம் தேதி வரை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751452

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1751512) வருகையாளர் எண்ணிக்கை : 347
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Manipuri , Punjabi , Telugu