உள்துறை அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: நாடு முழுவதும் 10 சைக்கிள் பேரணிகளை நடத்துகிறது சிஐஎஸ்எப்

Posted On: 02 SEP 2021 2:39PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 10 சைக்கிள் பேரணிகளை, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) நடத்துகிறது. இவற்றில் மிக நீண்டதூர சைக்கிள் பேரணி, வரலாற்று சிறப்புமிக்க புனே எர்வாடா சிறையில் தொடங்கி, தில்லி ராஜ்காட்டில் முடிகிறது. 27 நாட்கள் மேற்கொள்ளப்படும் 1,703 கி.மீ தூர பயணத்தில், இந்த சைக்கிள் பேரணி, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறந்த இடங்களை கடந்து செல்லும். 

இந்த சைக்கிள் பேரணி புனே எர்வாடா சிறையில் செப்டம்பர் 4ம் தேதி காலை 8 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும். எர்வாடா சிறையில்தான், மத அடிப்படையிலான தொகுதி வரையறைக்கு எதிராக காந்திஜி போராடியபோது, பூனா சட்டம் கையெழுத்தானது.  இந்த சிறையில் காந்திஜி 3 முறை அடைக்கப்பட்டார்.

இந்த சைக்கிள் பேரணி 27வது நாளில், மகாத்மா காந்தி சமாதி ராஜ்காட்டில் அக்டோபர் 2ம் தேதி முடிவடையும். நாட்டின் இளைஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வீரமான கதைகள், மற்றும் சுதந்திர போராட்ட இயக்கத்தின் அறியப்படாத நாயகர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. 

இந்த சைக்கிள் பேரணி மகாராஷ்டிராவின் பல பகுதிகளை கடந்து செல்கிறது.  கடுமையான கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

*****************



(Release ID: 1751430) Visitor Counter : 219