நிலக்கரி அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மஹோத்சவம்: இந்திய நிலக்கரி நிறுவனம் சார்பாக சாலையோர வியாபாரிகள், வாடகை கார் ஓட்டுனர்களுக்கு சணல், துணிப் பைகள் விநியோகம்

Posted On: 01 SEP 2021 2:42PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய நிலக்கரி நிறுவனம், கொல்கத்தா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் மற்றும் வாடகைக்கார்கள்/ ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு சணல் மற்றும் துணி பைகளை வழங்கும் புதுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. பைகளை விநியோகிக்கும் இந்த ஒரு வார கால திட்டம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் கீழ் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

அன்றாட பயன்பாட்டிற்கு ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளுக்கு மாற்றாக இயற்கைக்கு உகந்த சணல் மற்றும் துணி பைகளை உபயோகிக்குமாறு இந்த பிரச்சாரத்தின் போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இது தவிர, மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனம் (சிசிஎல்), சிறப்பு ஓவியப் போட்டியை நடத்தியது. ‘பசுமைக்கு மாறுவோம், தூய்மையான தண்ணீரைப் பருகவும்என்ற தலைப்பிலான இந்தப் போட்டியில் நிலையான வளர்ச்சியைத் தங்களது கற்பனை திறன் மற்றும் கண்கவர் ஓவியங்கள் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751069

                                                                              -----



(Release ID: 1751097) Visitor Counter : 329