உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குவாலியர்-இந்தூர் இடையே முதலாவது நேரடி விமான சேவை: மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்துத் துவக்கம்

Posted On: 01 SEP 2021 1:04PM by PIB Chennai

சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான இணைப்பை வலுப்படுத்தும் வகையில்  2 விமானங்களின் சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் வி கே சிங் (ஓய்வு) மற்றும் செயலாளர் திரு பிரதீப் கரோலா ஆகியோர் காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள். இதன் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர்- இந்தூர்- தில்லி வழித்தடத்தில் இண்டிகோ நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தூர் முதல் துபாய் வரையிலான ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான், போபாலில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு பரத் சிங் குஷ்வாஹா, மாநிலங்களவை உறுப்பினர் திரு விவேக் நாராயண் ஷேஜ்வால்கர் உள்ளிட்ட பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, “அனைவரும் பறப்போம், அனைவரும் இணைவோம் என்ற மத்திய அரசின்  முன்முயற்சியின் முக்கிய நோக்கங்களுக்கு இணங்க இந்தூர்- குவாலியர்- தில்லி வழித்தடத்தில் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதிக சாத்தியக்கூறுகள் உள்ள மத்திய பிரதேசத்தின் இரண்டு நகரங்களுக்கு இடையே விமான இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்”, என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751046

******

 

(Release ID: 1751046)


(Release ID: 1751065) Visitor Counter : 261