இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
டோக்கியோ பராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையைப் பத்தாக உயர்த்திய மாரியப்பன், சரத், சிங்ராஜ்
Posted On:
31 AUG 2021 6:52PM by PIB Chennai
இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்றுநர்களாகப் பணிபுரியும் மாரியப்பன் தங்கவேலு மற்றும் சரத் குமார், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை செவ்வாயன்று வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ரியோ 2016-இல் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இது இரண்டாவது பாராலிம்பிக் பதக்கமாகும். முன்னதாக இன்று, துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கத்தை வென்றார். டோக்கியோ பராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக இன்று உயர்ந்தது.
1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டிய மாரியப்பனின் சாதனை சிறப்பானதாகும். 1.83 மீட்டர் உயரத்தைத் தாண்டி சரத்தும் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் சத்யநாராயணாவிடம் பயிற்சி பெற்றார்.
2017-இல் பத்ம ஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளையும், 2021-இல் கேல் ரத்னா விருதையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அரசின் ஆதரவுடன், ஐந்து சர்வதேசப் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்திய அரசின் முழு நிதியுதவியுடன் டோக்கியோ பாரலிம்ப்பிக்கிற்காக உக்ரேனில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சரத் குமார் பயிற்சி பெற்றார். ஹரியானாவை சேர்ந்த சிங்ராஜும் அரசு உதவியுடன் பயிற்சி பெற்றவராவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750824
----
(Release ID: 1750939)
Visitor Counter : 224