குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி இந்தியா வினாடி-வினா போட்டி: குடியரசு துணைத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 30 AUG 2021 3:54PM by PIB Chennai

காதியுடன் அம்ருத் மஹேத்சவம் என்ற மின்னணு வினாடி-வினா போட்டியை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு புதுதில்லியில் நாளை (ஆகஸ்ட் 31,2021) தொடங்கிவைப்பார். விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த வினாடி-வினா போட்டியை வடிவமைத்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டம், போராட்டத்தில் வீரர்களின் தியாகங்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு காதியின் மரபு ஆகியவற்றுடன் பொதுமக்களை இணைப்பதை இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம், சுதேசி இயக்கத்தில் காந்தியின் பங்கு, இந்திய அரசியல் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரை, 15 நாட்களுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அனைத்து மின்னணு தளங்களிலும் தினசரி 5 கேள்விகள் கேட்கப்படும். இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு https://www.kviconline.gov.in/kvicquiz/ என்ற இணையதள பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். 100 வினாடிகளுக்குள் 5 கேள்விகளுக்கும் பங்கேற்பாளர்கள் விடை அளிக்க வேண்டும். தினமும் காலை 11 மணிக்குத் தொடங்கும் இந்த வினாடி-வினா போட்டியில் இரவு 11 மணி வரை கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் குறைந்த நேரத்தில் அதிகபட்ச கேள்விகளுக்கு சரியான விடை அளிப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாளொன்றுக்கு 21 பேர் (முதல் பரிசு- 1 நபர், இரண்டாம் பரிசு -10 பேர், மூன்றாம் பரிசு -10 பேர்) வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் மொத்தம் ரூ. 80,000 மதிப்பிலான மின்னணு கூப்பன்கள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். http://www.khadiindia.gov.in/ என்ற இணையதளத்தில் கூப்பன்களைப் பயன்படுத்தி பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750423

 

------



(Release ID: 1750459) Visitor Counter : 440